மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில், ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதனிடையே அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் எண்ணி கணிக்கும் முறையில் தீர்மானத்திற்கு அனுமதிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதன்பின்னர், ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் தொடர்பாக சபையில் கதவுகள் மூடப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆளுநர் ரவிக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர். ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம்- 144 உறுப்பினர்கள் ஆதரவு
Tamil News