No results found

    ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிக்கு ரூ.1500 கோடி மதிப்பில் வீடு வழங்கிய முகேஷ் அம்பானி


    உலக பணக்காரர்களில் ஒருவரான இந்தியாவின் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமங்களின் தலைவராக உள்ளார். இந்த நிலையில் முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிக்கு ரூ.1,500 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாக கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு வலது கரம் என்று அழைக்கப்படு பவர் மனோஜ் மோடி. இவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மனோஜ் மோடிக்கு மும்பை நேபியர் சாலையில் உள்ள 22 மாடிகள் கொண்ட பிரமாண்ட வீட்டை முகேஷ் அம்பானி வழங்கி உள்ளார்.

    1.7 லட்சம் சதுரஅடி பரப்பளவு கொண்ட இந்த சொகுசு வீடு ரூ.1500 கோடி மதிப்புடையது. முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்தியபோதே மனோஜ் மோடி அந்நிறுவனத்தில் சேர்ந்தார். மேலும் அம்பானி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வருகிறார். ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். அந்நிறுவனத்தின் பல ஒப்பந்தங்களுக்கு மூளையாக இருந்துள்ளார். இதனால் மனோஜ் மோடிக்கு பல கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை பரிசாக முகேஷ் அம்பானி வழங்கி உள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال