சட்ட சபையில் கேள்வி நேரத்தில் பேசிய மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, "மதுரை மேற்கு தொகுதியில் ஒரே ஒரு அரசு கல்லூரி மட்டுமே உள்ளது. அதுவும் மகளிர் கல்லூரியாக இருப்பதால், இருபாலர் படிக்கக்கூடிய வகையில் அரசு கல்லூரிகள் துவக்க அரசு முன்வர வேண்டும். தங்கள் தொகுதியில் 3.5 ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. கடந்த ஆண்டு கேள்வி நேரத்தின் போது அமைச்சர் செய்து கொடுப்பார் என வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்" என கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், முதலமைச்சர் செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே ஆறு முதல் ஏழு உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வியில் சிறந்து விளங்கும் மதுரையில் ஒரு பல்கலைக்கழகமே உள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் மதுரையில் உறுப்புக்கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றுவதற்கு அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார்.
மதுரை மேற்கு தொகுதியில் அரசு கல்லூரி அமைக்க பரிசீலனை- சட்டசபையில் அமைச்சர் பொன்முடி தகவல்
Tamil News