No results found

    அடினோ வைரஸ் தாக்கத்தால் தீவிர காய்ச்சல்- குஷ்பு ஐதராபாத் ஆஸ்பத்திரியில் அனுமதி


    பிரபல திரைப்பட நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை குஷ்பு சிகிச்சை பெற்று வரும் போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் தனக்கு காய்ச்சல், தொண்டை வலி, சோம்பல் ஏற்பட்டுள்ளதால் நல்ல ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வருகிறது. ரசிகர்கள் யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். உடல் நிலை சீராக சிறிது நாட்கள் ஆகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் வந்தால் யாரும் அலட்சியப்படுத்த வேண்டாம் என பதிவிட்டுள்ளார். நடிகை குஷ்புக்கு அடினோவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நடிகை குஷ்புவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال