குளிகையில் திருமணம் செய்தால் அந்த மணவாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. விவாகரத்து நேரும். மீண்டும் திருமணம் செய்யும் நிலை வரலாம். இதனால் அந்த நேரத்தில் திருமணம் தவிர்க்கப்படுகின்றன. இந்த நேரத்தில் தங்க நகையை அடமானம் வைப்பது, கடன் வாங்குவது, இறந்தவர்களின் உடலை எடுப்பது போன்ற காரியங்களை செய்யக்கூடாது அப்படி செய்தால் அந்த விஷயங்கள் அனைத்தும் திரும்ப திரும்ப நடைபெறும் என்று நம்பப்படுகிறது. இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும். எந்த மாதிரியான விஷயங்களை குளிகையில் தவிர்க்கலாம் என்று அல்லவா? எனில் குளிகையில் என்ன செய்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று இப்பதிவில் பார்ப்போமா?
ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களில் எப்படி நல்ல விஷயங்களை தவிர்க்கிறோமோ! அதேபோல் குளிகை நேரத்தில் நல்ல காரியங்கள் செய்யப்படமாட்டாது. இந்த நேரத்தில் தங்க நகை வாங்கலாம். இந்த நேரத்தில் வாங்கப்படும் தங்க நகையானது பன்மடங்காக உங்கள் வீட்டில் பெருகும் என்பது ஐதீகம். குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் தானே பிரச்சனை? திரும்ப கொடுக்கலாம் அல்லவா? அவ்வாறு கொடுத்தால் உங்களுக்கு பணவரவு அதிகம் உண்டாகி கடனை திரும்ப கொடுத்து அந்த கடன் முழுவதும் அடைபடும்படி செய்து விடும். இந்த அதிர்ஷ்ட நேரத்தில் நீங்கள் இந்த விஷயத்தை செய்தால் பணம் கொழிக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது. பணத்தை ஈர்க்கும் சக்தி சிகப்பு நிறத்திற்கு உண்டு. நீங்கள் குளிகையில் ஒரு கண்ணாடி பௌலில் சிகப்பு பட்டு துணியை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களது படுக்கை அறையில் அல்லது யாரும் அடிக்கடி வராத இடங்களில் இதை வைத்துவிட்டு அதில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை தினமும் சேமித்து வரலாம்.
குடும்பத்தில் இருக்கும் நபர்களோ அல்லது நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ, யாராக இருந்தாலும் சரி அந்த சிகப்பு பட்டு துணியின் மீது குளிகை நேரத்தில் தினமும் ரூபாய் நோட்டுகளை சேமித்து வருவதன் மூலம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற முடியும். இவ்வாறு நீங்கள் குளிகை நேரத்தில் சேமித்து கொண்டே வரும் பணத்தை தினசரி உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. நீங்கள் சேமித்த இந்த பணத்தை கொண்டு நல்ல விஷயங்கள் செய்யலாம். உங்கள் வாழ்வில் ஏற்பட இருக்கும் மிகப்பெரிய காரியத்திற்காக கூட பயன்படுத்திக் கொள்ளலாம். வீடு கட்டப் போகிறீர்கள் என்றால் அதில் இந்த தொகையை சேர்த்துக் கொள்ளலாம். தொழில் துவங்கப் போகிறீர்களா? வியாபாரம் செய்யப்போகிறீரகளா? வண்டி, வாகனம் வாங்க போகிறீர்களா? நிலம் வாங்கப் போகிறீர்களா? இது போன்ற மிகப்பெரிய விஷயத்திற்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் நீங்கள் செய்ய இருக்கும் காரியங்கள் தடையின்றி சிறப்புடன் நடைபெறும். குளிகையில் சேமிக்கப்படும் பணம் ஆனது பன்மடங்காகப் பெருகும் ஆற்றலுடையது.