சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் மகளிர் ஆணைய தலைவர் குமரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அதன்பின்னர் ஏராளமான மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளனர். கடந்த 2008 முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக புகார் மனுவில் கூறியுள்ளனர். இந்நிலையில், மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் வன்கொடுமை, பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.
சென்னை கலாஷேத்ரா பாலியல் தொல்லை.. மாணவிகள் போராட்டம்... பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
Tamil News