No results found

    என் கிரிக்கெட் வாழ்வின் இறுதி கட்டத்தை மகிழ்ச்சியாக கடப்பது முக்கியமானது- தோனி


    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு ஐபிஎல் கிரிக்கெட்டின் 29வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கூறுகையில், "என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது. அதை மகிழ்ச்சியாக கடப்பது முக்கியமானது. சென்னைக்கு வருவது மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். என் பேச்சை கேட்க சென்னை ரசிகர்கள் கடைசி வரை இருக்கின்றனர்" என்றார்.

    Previous Next

    نموذج الاتصال