காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்த ஒவ்வொரு மாநிலத்திலும் முயற்சிகளை மேற்கொள்ளும்படி டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் வீடுகள் தோறும் காங்கிரசை கொண்டு சேர்க்கும் வகையில் புதிய செயல்திட்டம் ஒன்றை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். வீடுகள் தோறும் 'என் வீடு ராகுல் வீடு' என்ற வாசகத்துடன் ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் இதன் நோக்கம். ஒவ்வொரு நிர்வாகியும் தாங்கள் விரும்பும் தலைவர்களின் படங்களுடன் தனது படத்தையும் போட்டுக்கொள்ளலாம். என் வீடு ராகுல் வீடு என்பதுதான் பளிச்சென்று தெரியவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். அதேபோல் எல்லா இடங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு கண்டிப்பாக ஒட்ட வேண்டும். இதுதவிர தங்கள் பகுதிகளில் தெரிந்தவர்கள், நண்பர்கள் காங்கிரஸ் அனுதாபிகள் வீடுகளில் ஒட்ட வேண்டும் என்று கூறி உள்ளனர். நிர்வாகிகளும் தங்கள் படங்கள் பளிச்சென்று தெரியும் வகையில் ஒட்டி வருகிறார்கள். வருகிற தேர்தலில் ஓட்டு கேட்க ஸ்டிக்கர் ஒட்டுவோம் என்று கூறி வருகிறார்கள்.
'எங்கள் வீடு... ராகுல் வீடு...': வீடுகள் தோறும் காங்கிரசை வளர்க்க புதிய முயற்சி
Tamil News