No results found

    குருப்பெயர்ச்சி: நாளை என்ன செய்ய வேண்டும்?


    குருப்பெயர்ச்சியன்று குருவை நாம் ஒவ்வொருவரும் கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு. அதிகாலையில் சான்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள், குருவாக நம்மை வழிநடத்திச் செல்பவர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் ஆசி பெறுவது நல்லது. நமது ஜாதகத்தில் குரு வரப்போகும் இடத்தைப் பொறுத்து பெயர்ச்சிக்கு முன்னதாக அல்லது பெயர்ச்சியன்றோ எப்படி, எப்போது எங்கு வழிபடுவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா கிரகங்களையும் பெயர்ச்சிக்குப் பின்னால் தான் வழிபடுவர். 'குரு' சுபகிரகம் என்தால் நாம் பெயர்ச்சி அன்று அல்லது அதற்கு முன்னால் நமது ஜாதகப்படி யோகபலம் பெற்ற நாளில் சென்ற வழிபட்டு வரவேண்டும் என்பர். அவ்வாறு வழிபட்டால் நாளும் நல்லதே நடக்கும்.

    எல்லா தெய்வங்களுக்கும் உதவியாளர்களைக் கொண்டு அர்ச்சனைகள் செய்யலாம். ஆனால் குருவிற்கு மட்டும் தாங்களே சென்று வழிபட்டால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப கோடி நன்மைகள் நம்மைத் தேடிவரத் தொடங்கும். இல்லையேல் யார் வழிபடச் செல்கின்றார்களோ அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    Previous Next

    نموذج الاتصال