No results found

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்குகிறது சுற்றுலா பயணிகளை கவரும் பச்சை ரோஜா


    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் கோடை விழா நாட்களில் இங்கு பழக்கண்காட்சி நடத்தப்படுகிறது. சீசன் நாட்களை தவிர, சாதாரண நாட்களில் நாளொன்றுக்கு 500 முதல் 3,500 சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள், மலர்ச்செடிகள் சிம்ஸ் பூங்காவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில், பல வண்ணங்களிலான ரோஜா மலர்களும் அடங்கும். இந்நிலையில், கோடை சீசனை முன்னிட்டு நடைபெறும் பழ கண்காட்சியை ஒட்டி சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா நடவு செய்யப்பட்டது. தற்போது பச்சை ரோஜாக்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன. இவற்றை காணும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அரிய வகைத் தாவரங்கள் உள்ளன. குறிப்பாக, செலோசியா, ஜிப்சோபிலா, அன்ட்ரோனியா, பிகோனியா, பிளாக்ஸ், பேன்சி, பெட்டோனியா, ரோஜா உள்ளிட்ட மலர் நாற்றுக்கள் இங்குள்ள நர்சரியில் உருவாக்கப்பட்டுஉள்ளன. இவற்றைக் கண்டுகளிப்பதற்காக ஆண்டுதோறும், இங்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதிலும் சிறப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர். இதற்கிடையே கோடை விடுமுறை மற்றும் நீலகிரியில் நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது. விடுமுறை தினம் ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு துறை உள்ளிட்ட இடங்களில் அதிக சுற்றுலா பயணிகள் கூட்டத்தை காண முடிந்தது. இதன் காரணமாக ஊட்டியில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வரிசையாக சென்றன.

    Previous Next

    نموذج الاتصال