தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய மாற்றத்தை கண்டுவருகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.520 அதிகரித்தது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,600-க்கும், ஒரு சவரன் ரூ.44,800-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,800-க்கும் விற்பனையானது. இந்நிலையில் தங்கம் விலை ஏற்கனவே இருந்த உச்சத்தையும் கடந்து, இன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 45 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வை போல, வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் 90 காசுகள் அதிகரித்து 80 ரூபாய்க்கு 70 காசுகளாக விற்கப்படுகிறது.
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது- சவரன் ரூ.45 ஆயிரத்தை தாண்டியது
Tamil News