No results found

    தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார்- ஆளுநர் இரங்கல்


    தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி' என தெரிவித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. நரேஷ் குப்தா 2005 முதல் 2010 வரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

    Previous Next

    نموذج الاتصال