கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது காரை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சோதனையின்போது சந்தேகத்திற்கு உரிய எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், சோதனைக்குப் பிறகு முதலல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் காரை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
Tamil News