பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க. சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் விடுத்துள்ளார். அதில், தி.மு.க.வினர் சொத்துப் பட்டியல் தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். தி.மு.க.வினர் சொத்துப் பட்டியல் தொடர்பாக இணைய தளத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும். 48 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்மீது சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடரப்படும். மேலும், இழப்பீடு தொகையாக தி.மு.க.வுக்கு ரூ.500 கோடி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சொத்துப் பட்டியல் தொடர்பாக மன்னிப்பு கேட்கவேண்டும் - அண்ணாமலைக்கு தி.மு.க. நோட்டீஸ்
Tamil News