No results found

    புதிய நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு- பாராளுமன்றத்தில் தி.மு.க. நோட்டீஸ்


    காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் அறிவித்ததற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. நிலக்கரிகளை ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து டெல்டா பகுதிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்த நிலையில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி பாராளுமன்ற மக்களவையில் தி.மு.க. நோட்டீஸ் கொடுத்து உள்ளது. வேளாண் மண்டலங்களில் மத்திய அரசு புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. புதிய நிலக்கரி சுரங்கம் தொடர்பாக மத்திய நிலக்கரித்துறை மந்திரி பதில் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال