அதில் ஒருவர், 'அவர் அருகில் இருந்த பெண்ணின் நிலையையும், சுற்றி இருந்த ஆண்களின் மனநிலையையும் எண்ணிப்பார்க்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவர் 'மெட்ரோ ரெயிலில் ஏ.சி. வேலை செய்யவில்லை போல' என்று கிண்டலடித்துள்ளார். இப்படி பலரும் பல கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் அதன் பயணிகள் சமூக அந்தஸ்தை பேணும் வகையில் கண்ணியமான ஆடைகளை அணிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற ஆடைகள் அணிவதன் மூலம் சக பயணிகளின் உணர்வுகளை அவமதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் சட்டத்தின்படி பிரிவு 59-ன் கீழ் அநாகரீகமான ஆடை அணிந்து பயணிப்பது குற்றமாகும் என்று எச்சரித்துள்ளது. மேலும் தான் விரும்பிய ஆடை அணிவது தனிப்பட்ட சுதந்திரம்தான். ஆனாலும் பொது போக்குவரத்தில் இதுபோன்ற அநாகரீகமான ஆடை அணிந்து வருவதை தவிர்க்குமாறு டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் அரைகுறை ஆடையில் பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளம்பெண் நீச்சல் உடை அணிந்து டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் இளம் பெண் ஒரு இருக்கையில் பெரிய கருப்பு நிற பையுடன் அமர்ந்திருந்தார். அவர் எழுந்து நிற்கும்போதுதான் அவர் அரைகுறை ஆடை அணிந்து இருப்பது தெரிய வந்தது. அருகில் இருந்தவர்கள் இதனை கண்டும் காணாமல் இருந்தனர். சிலர் முகம் சுளித்தனர். வழக்கம் போல இந்த செயலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத ளங்களில் கருத்து மோதல் நடந்து வருகிறது.