No results found

    வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை 76 ரூபாய் குறைப்பு


    சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 76 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் வணிக சிலிண்டர் 2,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    Previous Next

    نموذج الاتصال