இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் டீசரை அல்லு அர்ஜுனின் பிறந்தாளான ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
And it begins ❤️🔥❤️🔥#PushpaTheRule Update tomorrow at 11:07 AM 🔥🔥
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) April 4, 2023
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku @SukumarWritings @MythriOfficial pic.twitter.com/w3CcRVCK4N