No results found

    இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் - ரசிகருக்கு அறிவுரை கூறிய விஜய்


    தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு மேலாக விலையில்லா விருந்தகம் நடத்தும் திருச்சி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களை சார்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளை சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் நேரில் சந்தித்தார். அப்போது நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்த நடிகர் விஜய் இந்த உதவியை செய்ய மேலும் பணம் வேண்டும் என்றால் தன்னிடம் கேளுங்கள் உதவி செய்கிறேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அடுத்தடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள திட்டமிட இருப்பதாகவும், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் ரசிகர்களிடம் விஜய் கேட்டுக்கொண்டார். சுமார் 2 மணி நேரம் நடந்த சந்திப்பில், புதியதாக சில நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சில் ரசிகர் ஒருவர் தனது நெஞ்சில் ஆட்டோகிராப் கேட்டு அதை பச்சை குத்த போகிறேன் என்று கூறிய போது அது தவறு இந்த தவறை செய்யாதீர்கள் என்று தவிர்த்து வெள்ளை காகிதத்தில் ஆட்ரோகிராப் போட்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் விஜய். மேலும் தொடர்ந்து மக்கள் பணிகளை செய்ய அவர் அறிவுறுத்தியதாகவும் வழக்கம்போல் கூட்டத்திற்கு வரும் இன்னோவா காரில் வராமல் எளிமையான காரில் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு ரசிகர்களிடையே பெறும் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال