No results found

    தங்க கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த 9 சுங்க இலாகா அதிகாரிகள் டிஸ்மிஸ்- சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை


    கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் பகுதிகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக புகார்கள் உள்ளன. நாட்டிலேயே அதிக அளவில் கேரளாவில் தான் தங்கம் கடத்தல் பெருமளவில் நடந்து வருகிறது. இதனை தடுக்க சுங்க இலாகாவினரும், வருவாய் புலனாய்வுத்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் தங்கம் கடத்தல் குறைந்தபாடில்லை. சுங்க இலாகா மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சிலர் இதற்கு உடந்தையாக இருப்பதால் தான் தங்கம் கடத்தல் நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் கோழிக்கோடு விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் சிக்கினர். அவர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் கடத்தல் தொடர் கதையாகவே உள்ளது. இந்நிலையில் தங்க கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கூடுதல் நடவடிக்கையாக அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். கோழிக்கோடு விமான நிலைய சூப்பிரண்டுகள் ஆஷா, கணபதி, இன்ஸ்பெக்டர்கள் யோகேஷ், யாசர் அராபத், சுதீர் குமார், நரேஷ் குலியா, மினிமோள் மற்றும் காவலர்கள் அசோகன், பிரான்சின் ஆகிய 9 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சி.பி.ஐ. விசாரணையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال