No results found

    எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தீவிரம் - மம்தா பானர்ஜியை நாளை மறுதினம் சந்திக்கிறார் நிதிஷ்குமார்


    வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க.வை 100 தொகுதிகளுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என அவர் கூறியிருந்தார். இதற்கிடையே, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை நிதிஷ்குமார் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர். இந்நிலையில், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் நாளை மறுதினம் கொல்கத்தா செல்கிறார். அங்கு அவர் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மதியம் 2 மணியளவில் சந்திக்க உள்ளார். பாஜகவை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Previous Next

    نموذج الاتصال