No results found

    தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை


    தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார். அதன்படி, இன்று முக்கிய திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோ வெளியிட்டார். வீடியோவில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் என சில தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال