பொன்முடி ரூ.581 கோடி சொத்துக்களையும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1000 கோடி சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளனர். தி.மு.க. அமைச்சரான உதயநிதிக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கும், கனிமொழிக்கு ரூ.830.33 கோடி அளவுக்கும் சொத்துக்கள் உள்ளன. கலாநிதிமாறனுக்கு ரூ.12,450 கோடி சொத்துக்களும், டி.ஆர்.பாலுவுக்கு ரூ.10,840 கோடி சொத்துக்களும் இருக்கின்றன. தி.மு.க. மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு ரூ.579.18 கோடியும், கலாநிதி வீராசாமி எம்.பி.க்கு ரூ.2,923 கோடியும், சபரீசனுக்கு ரூ.902 கோடியும், சொத்துக்கள் உள்ளன. இதனை வீடியோவாக வெளியிடுகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படி தி.மு.க. பிரமுகர்களின் சொத்துப்பட்டியல் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி என்கிற அளவில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஆண்டு வருவாய் மதிப்பை விட தி.மு.க.வினரின் பினாமி சொத்துக்களின் மதிப்பு அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யிடம் நேரில் புகார் அளிக்க உள்ளேன். தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தி.மு.க.வினரின் முதல்கட்ட சொத்து பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளேன். அடுத்தடுத்து மேலும் பலரின் சொத்து விவரங்களை வெளியிட உள்ளேன். சொத்து பட்டியல் 4 பாகங்களாக உள்ளன. அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன். தமிழகத்தில் ஊழலை முற்றிலுமாக வேரறுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. ஊழலுக்கு எதிரான இந்த பயணம் தொடரும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.