No results found

    2022-23 நிதியாண்டில் இந்திய ரெயில்வேக்கு ரூ2.40 லட்சம் கோடி வருவாய்


    இந்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 2022-23 நிதியாண்டில் இந்திய ரெயில்வேக்கு ரூ2.40 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.49,000 கோடி அதிகமாகும். கடந்த 2022-23-ம் ஆண்டில், சரக்கு வருவாய் ரூ. 1.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும். பயணிகள் வருவாய் 61 சதவீதம் அதிகரித்து ரூ.63,300 கோடியை எட்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வூதியச் செலவினங்களை இந்திய ரெயில்வேயால் சமாளிக்க முடிகிறது. வருவாய் மற்றும் செலவின மேலாண்மையை சரி செய்ததன் மூலம் ரெயில்வேயின் மூலதன முதலீடு ரூ.3,200 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال