No results found

    ஐபிஎல் டி20 போட்டி- 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி


    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்கள், இஷான் கிஷன் 38 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் களமிறங்கிய கேமரான் கிரீன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தார். மறுமுனையில் சூரியகுமார் யாதவ் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து கேமரான் கிரீனுடன் இணைந்த திலக் வர்மா, ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 17 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 37 ரன்கள் விளாசிய நிலையில் அவர் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 16 ரன்களில் அவுட் ஆனார்.

    மறுமுனையில் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்த கேமரான் கிரீன் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் சேர்க்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்தது. ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சென் 2 விக்கெட் எடுத்தார். புவனேஸ்வர் குமார், நடராஜன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக மாயங்க் அகர்வால் 48 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஹெயின்ரிச் கிளாசன் 36 ரன்களும், எய்டன் மார்க்ரம் 22 ரன்களும், மார்கோ ஜான்சென் 13 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களும், ராகுல் திரிபாதி 7 ரன்களுடம், அபிஷேக் சர்மா ஒரு ரன்னும் எடுத்தனர். இறுதியாக அப்துல் சமாத் 9 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இவருக்கு அடுத்ததாக மயங்க் மார்கண்டே 2 ரன்களும், புவனேஸ்வர் குமுார் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டத்தின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றியடைந்துள்ளது.

    Previous Next

    نموذج الاتصال