No results found

    காதல் தோல்வியில் இருந்து இளைஞர்களை மீட்க புதிய பிரசாரம்- அரசு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு


    காதலில் தோல்வி அடைபவர்கள் சோகம், மன வருத்தம், தாழ்வு மனப்பான்மை, தனிமை போன்றவற்றால் அவர்களின் மன வேதனை அதிகரித்து விடுகிறது. இதனால் சில நேரங்களில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. ஏழை, நடுத்தர நாடுகள் மட்டுமின்றி, வளர்ந்த நாடுகளில் ஒன்றான நியூசிலாந்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் அதனை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காதல் தோல்வியில் சிக்கி அவதிப்படும் இளம் தலைமுறையினரை மீட்க நியூசிலாந்து அரசு புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதன்படி 'லவ் பெட்டர்' என்ற பிரசாரத்தை அரசு தொடங்கி உள்ளது.

    இந்த முயற்சியானது காதல் தோல்வியால் குடும்பங்களில் ஏற்படும் வன்முறையை தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்காக 3 ஆண்டுகளில் சுமார் 4 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 33 கோடி ரூபாய்) ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த பிரசாரத்தில் பலரும் தங்களது காதல் தோல்வியின் நிஜ அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது காதல் தோல்வி அடைந்தவர்கள் தங்களின் உணர்வுகளை ஆரோக்கியமாக மாற்ற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசாரத்தை தொடங்கி வைத்த நியூசிலாந்து நாட்டின் சமூக மேம்பாட்டு இணை அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன் கூறுகையில், தனக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்காமல் ஒரு வழி இருப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ளவும், அவர்களின் காயங்களை சமாளிக்கவும் அரசு விரும்புகிறது என்றார்.

    Previous Next

    نموذج الاتصال