No results found

    எந்த வயதில் ஆண்களின் இனப்பெருக்கம் வீழ்ச்சியடைகிறது?


    45 வயதைத் தாண்டிய தம்பதிகளுக்கு, குழந்தைப் பெறும் வாய்ப்பு கடுமையாக குறைகிறது. ஆண்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் இனப்பெருக்க திறன் குறைய ஆரம்பிக்கும். ஆண் 40 வயதை எட்டினால், அவரது விந்தணுவின் தரம் குறைய நலிவுறும். இதனால் தான் 40 வயதை எட்டிய பின், ஆண்களால் தன் துணைக்கு வேகமாக குழந்தையைத் தர முடிவதில்லை. வயது அதிகமான ஆண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு உடல்நல குறைபாடுகள் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்று ஆண்களுக்குத் தெரியாத ஏராளமான உண்மைகள் உள்ளன. ஆண்கள் ஒவ்வொரு வயதைக் கடக்கும் போது, அவர்களின் விந்து எண்ணிக்கை மற்றும் இயக்கம் குறைய ஆரம்பிக்கும். இதனால் அவர்களது இனப்பெருக்கமும் பாதிக்கப்படும்.

    வயது அதிகமான ஆண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஆட்டிஸத்திற்கான வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும் இளமை வயதில் பெற்றெடுத்த குழந்தைகளை விட, முதுமையில் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு 5-6 மடங்கு அதிகமாக ஆட்டிஸத்திற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 40 வயதிற்கு மேலான ஆண்களால் கருத்தரிக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாம். இளம் வயதைக் கொண்ட ஆணும் உறவில் ஈடுபடும் பெண்கள் கருத்தரிக்க 2 மாதம் போதும். ஆனால் 40 வயதிற்கு மேலான ஆணால் கருத்தரிக்க 2 வருடம் கூட ஆகலாமாம். முக்கியமாக தம்பதிகளில் பெண் இளமையாகவும், ஆண் 45 வயதினராக இருந்தால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு இன்னும் அதிகமாக இருக்கும். மேலும் ஆண்களின் முறையற்ற வாழ்க்கை முறை, உணவு முறைகளால் 30 வயது தொடங்கத்திலேயே ஆண்களின் விந்தணுவின் வீரியம் குறைய ஆரம்பிக்கிறது.

    Previous Next

    نموذج الاتصال