மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் உள்ள ஷிப்பூர் பகுதியில் ராம நவமியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலின் போது சிலர் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். மேலும் அங்குள்ள வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றத்தைக் குறைக்க போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ராம நவமி பேரணியில் மோதலை ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ராம நவமி பேரணியில் கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு - ஹவுராவில் பரபரப்பு
Tamil News