நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யக் கோரி திருச்சியில் நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து பொதுக்கூட்டம் போன்று மேடை அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசும்போது, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது குறித்தும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது, சட்டவிரோதமாக கூடுதல், கலகம் செய்ய தூண்டுதல், அமைதியை சீர்குலைக்க தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சீமான் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- _புதுச்சேரி
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- மேலும் தகவல்
- _தொழில்நுட்பம்
- _ஆரோக்கியம்
- _மருத்துவம்
- _வாழ்வியல் முறை
- _இரத்தினக்கல்
- _வரலாறு
No results found