ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா 1 லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரண பணிகளுக்கு ரூ.389 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.2,393 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும். பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும். முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 17.7 லட்சம் மனுக்களில் 17.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும். அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து அனைத்து ஊராட்சி, நகர்ப்புற பகுதிகளில், நலத்திட்ட உதவிகளை பெற முகாம்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வதந்தி வீடியோ பரப்பிய சமூக விரோதிகள் 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.4,236 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.