No results found

    மகளிர் இலவச பஸ் பயணத்துக்கு ரூ.2800 கோடி நிதி ஒதுக்கீடு


    2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:- சென்னையில் பேருந்து பணிமனைகளை தரம் உயர்த்த ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி பணிமனைகள் மேம்படுத்தப்படும். 100 புதிய பேருந்துகள் வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் தமிழக போக்குவரத்து துறைக்கு ரூ.8056 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்துக்கு ரூ.2800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் இலவச பேருந்து பயண மானியத்துக்கு ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டீசல் மானியத்துக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    Previous Next

    نموذج الاتصال