No results found

    2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - லைவ் அப்டேட்ஸ்


    2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டசபை நிகழ்ச்சிக்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

    இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    திராவிட மாடல் ஆட்சி வெற்றி நடைபோட்டு வருகிறது- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    மொழிப்போர் தியாகி தாளமுத்து நடராஜருக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்.

    தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    அம்பேத்கரின் நூல்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்.

    கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும்.

    711 தொழில் நிறுவனங்களில் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் செயல்படுத்தப்படும்.

    இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் ரூ.223 கோடி செலவில் கட்டப்படும்.

    சோழர்களின் பெருமைமைய பறைசாற்றும் வகையில் தஞ்சையில் சோழர் அருங்காட்சியம் அமைக்கப்படும்.

    மாநிலம் முழுவதும் 25 பகுதிகளில் நாட்டுப்புற பயிற்சி மையம் அமைக்கப்படும்

    54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும் - நிதியமைச்சர்

    தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு.

    அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

    நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூ.7500 வழங்கப்படும்.

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி நிதி ஒதுக்கீடு

    உயர்கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    ரூ.25 கோடியில் ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படும்.

    தூய்மை பணிகளுக்கு நவீன இயந்திரம் வாங்கப்படும்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும். இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் - நிதியமைச்சர்

    மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிடர் நல விடுதிகள் ரூ.100 கோடியில் கட்டப்படும்.

    ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கீடு

    அயோத்தி தாசர் பண்டிதர் பெயரில் ஆதிதிராவிடர் குடியிருப்பு அமைக்க ரூ.3,511 கோடி நிதி ஒதுக்கீடு.

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ரூ.500 கோடியில் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

    வடசென்னை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ.147 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2.20 லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்

    பொது விநியோகத் திட்டத்திற்கு ரூ.10,500 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர்

    ராணுவத்தில் உயிர் தியாகம் செய்யும் படை வீரர்கள் குடும்பத்திற்கான நிதியுதவி ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்வு.

    மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ.320 கோடி ஒதுக்கீடு
    மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் அதிகரிப்பு.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் வெள்ளித்தடுப்பு பணியை மேற்கொள்ள ரூ.434 கோடி நிதி ஒதுக்கீடு.

    கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கீடு.

    217 செயற்கை பவள பாறைகள் அமைக்கப்படும்.

    கடல் அரிப்பு, கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடியில் நெய்தல் மீட்பு இயக்கம்.

    மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோபி வட்டாரத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்.

    10,000 கிலோமீட்டர் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்.

    தெருநாய்கள் இனவிருத்தி கட்டுப்பாட்டிற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

    கோவையில் செம்மொழிப்பூங்கா 2 கட்டங்களாக அமைக்கப்படும்.

    ஒகேனக்கல் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.7,149 கோடி நிதி ஒதுக்கீடு.

    தமிழகத்தில் 10,000 குளங்கள், ஊரணிகளை புதுப்பிக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு.

    முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.

    தமிழ்நாடு நெய்தல் திட்டம் அமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.
    கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் - நிதியமைச்சர்

    வளம்மிகு வட்டாரங்கள் திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் செயல்படுத்தப்படும்.

    ரூ.1000 செலவில் வடசென்னை வளர்ச்சி திட்டம்

    சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் கட்டப்படும்.

    போக்குவரத்து துறைக்கு ரூ.8059 கோடி நிதி ஒதுக்கீடு

    சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.320 கோடி நிதி ஒதுக்கீடு.

    நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.19,465 கோடி நிதி ஒதுக்கீடு

    1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

    கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

    மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்

    சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ரூ.20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் - நிதியமைச்சர்

    2030ஆம் ஆண்டுக்குள் 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
    தமிழகத்தில் 2 லட்சம் முதலீடுகள் பெறப்பட்டு 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

    சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    10 சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.

    பசுமை வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம். இந்தியாவில் உற்பத்தியான மின்சார வாகனங்களில் 46 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை.

    தீவுத்திடலில் வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கீடு- பட்ஜெட்டில் அறிவிப்பு

    500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் ரூ.1600 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

    அதிக சுற்றுலா பயணிகள் வருவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அரசு உருவாக்கியுள்ள சுற்றுலா கொள்கை விரைவில் வெளியிடப்படும் - நிதியமைச்சர்

    ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா 1 லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

    விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.2,393 கோடி ஒதுக்கீடு.

    மீன்பிடி தடைக்கால நிவாரண பணிகளுக்கு ரூ.389 கோடி ஒதுக்கீடு

    வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்-நிதியமைச்சர்

    பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்.

    முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 17.7 லட்சம் மனுக்களில் 17.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

    சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்.

    அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து அனைத்து ஊராட்சி, நகர்ப்புற பகுதிகளில், நலத்திட்ட உதவிகளை பெற முகாம்கள் அமைக்கப்படும்.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

    வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வதந்தி வீடியோ பரப்பிய சமூக விரோதிகள் 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக அதிகரிப்பு.

    நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு

    ரூ.4,236 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

    வரும் நிதியாண்டில் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும். உரிமைத் தொகை வழங்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு.

    ‘மகளிர் உரிமைத்தொகை’ தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும்

    மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

    சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும்.

    அண்ணா பிறந்தநாளான செப்.15-ந்தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
    Previous Next

    نموذج الاتصال