No results found

    உடுமலை சின்னாறு சாலையில் யானைகள் நடமாட்டம் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை


    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்ச ரகத்தில் உடுமலை மற்றும் மூணாறு இடையிலான சாலை அமைந்துள்ளது.அதில் ஏழுமலையான் கோவில் பிரிவில் இருந்து எல்லைப்பகுதியான சின்னாறு சோதனை ச்சா வடி வரையுள்ள 20 கி.மீ., ரோடு, தமிழக வனப்பகுதி யின் நடுவே நீள்கிறது.வனவிலங்குகள் பாது காப்புக்கருதி வாகன ஓட்டு னர்களை அறி வுறுத்தும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.அதில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையக்கூடாது, சமைத்தல் கூடாது, மது அருந்துதல் கூடாது, பிளாஸ்டிக் மற்றும் உணவுக்கழிவுகள் வீசக்கூ டாது என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்று ள்ளன.தற்போது வனப்ப குதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீ ருக்காக யானைகள் அவ்வ ப்போது ரோட்டை கடந்து அணை நோக்கி செல்கி ன்றன. அச்சமயத்தில் அவ்வழி த்தடத்தில் வாகனங்களில் செல்வோர் யானைகளை போட்டோ எடுக்க முற்படுகி ன்றனர். இதனால் வனத்துறை யினர், வாகன ஓட்டுன ர்களை எச்சரிக்கை செய்தும் வருகின்றனர்.வன விலங்குகளை காண நேரிட்டால் போட்டோ எடுக்க முயற்சிக்கக்கூடாது எனவும் எச்சரிக்கின்றனர். இது குறித்து வனத்துறை யினர் கூறியதாவது:- வனவிலங்குகளை மையப்படுத்தி செல்பி புகைப்படம் எடுக்கவும் முற்படுகின்றனர். இதனால் யானை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி துரத்தும் நிலை ஏற்படுகிறது.வன விலங்குகளின் அருகே சுற்றுலா பயணிகள் செல்ல க்கூடாது. மொபைல் போனில் செல்பி எடுப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.ரோந்துப்ப ணியில் இத்தகைய செயலில் எவரேனும் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Previous Next

    نموذج الاتصال