No results found

    போடி-தேனி இடையே அகலரெயில் பாதையில் என்ஜினை இயக்கி சிக்னல்கள் சோதனை


    போடி-மதுரை அகல ரெயில்பாதை பணிகள் முடிவடைந்த நிலையில் தேனி-மதுரை இடையிலான ரெயில்சேவை நடைபெற்று வருகிறது. இந்த சேவையை போடி வரை நீட்டிக்க பல்வேறு சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் போடி-தேனி இடையே ரெயில்பாதையை ஆய்வு செய்து ரெயில் இயக்க அனுமதி வழங்கிய நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி ரெயில் சேவை தொடங்குவதாக அறிவிக்க ப்பட்டது. இதற்கிடையே மதுரை ரெயில்நிலையத்தில் விரிவாக்க பணிகள் காரண மாக போடி-மதுரை ரெயில்சேவை ஒத்திவைக்க ப்பட்டது. இதையடுத்து கடந்த 23-ந்தேதி போடி-மதுரை இடையே ரெயில்பாதை அதிர்வுகள் குறித்து 3 பெட்டிகளுடன் கூடிய ரெயில் என்ஜின் இயக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று தேனியில் இருந்து ரெயில் என்ஜின் மட்டும் போடி வரை இயக்கி சோதனை செய்யப்பட்டது. மதுரை-போடி ரெயில் விரைவில் இயக்கப்பட உள்ளதால் தேனி-போடி வரையிலான நீட்டிக்கப்பட்ட ரெயில் பாதையில் சிக்னல்கள் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டதாக ரெயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.

    Previous Next

    نموذج الاتصال