நீரின் அளவு குறைவதைத் தவிர்க்க தினமும் 4 முதல் 5 லிட்டர் சுத்தமான குடிநீர் குடிக்க வேண்டும். கம்பில் அதிகநார்ச்சத்து, நீர்ச்சத்து உள்ளதால், கம்பங்கூழ் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். நுங்கு உடலிலுள்ள சூட்டை தணித்து, அம்மை மற்றும் வைரஸ் ஜூரம் ஏற்படுவதை தடுக்கும். நுங்கை தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண் குணமடைவதுடன், நுங்கிலுள்ள தண்ணீரை, வியர்குருவில் தடவினால் வியர்குருவும் குணமடை யும். வாரம் ஒரு முறை, சிறிதளவு சீரகத்தை நல்லெண்ணெய்யில் பொறித்து, சூடு தணிந்ததும் அந்த எண்ணெய்யை உச்சந்தலையில் வைத்தும், உடலில் பூசியும் குளிக்கலாம்.
* வெயில் காலம் முடியும் வரை அனைவருமே ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் பிரியாணி, கேழ்வரகு, சாம்பார் சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு பதில் நீர் வகையிலான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். காலையில் மோர், இளநீர் போன்றவையும், மதியம் தயிரும், மாலை வேளைகளில் தர்பூசணி பழச்சாறு, நுங்கு ஜூஸ் போன்றவற்றை அருந்துங்கள். * வீடுகளில் ப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை அருந்துவதை காட்டிலும் மண் பானையில் நீர் ஊற்றி வைத்து மண்பானை யில் இருந்து கிடைக்கும் குளிர்ந்த நீரை குடியுங்கள். * ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகளையும், ஜீன்ஸ் போன்ற வற்றையும் தவிர்த்து பருத்தியில் (காட்டன்) நெய்யப்பட்ட உடைகளை அணியுங்கள். பெண்களும் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம்.
* வெயிலில் வெளியே செல்பவர்கள் முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் கிரீம் தடவிவிட்டு வெளியே செல்லுங்கள். தரமான கூலிங்கிளாஸ் அணிவது நல்லது. * தினமும் இரண்டு முறை தலை முடியை தூய்மையான நீரில் நன்றாக அலசுங்கள். இரண்டு மூன்று முறை குளிக்கவும். வீட்டு வாசல்களில், ஜன்னல்கள் வெளியே வாழை இலையை தொங்க விடுங்கள். * ஏ.சி. அறையில் அதிக நேரம் இருப்பவர்கள் காலை அல்லது மாலை வேளைகளில் வெயில் இல்லாத நேரத்தில் அரை மணிநேரம் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதுபோன்று தற்காப்பு முறைகளை கடைப்பிடித்து இந்த கோடை வெயிலை அனைவரும் சமாளித்து பாதுகாப்பாக வாழ்வதோடு இயற்கையை பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம் என்று உறுதி ஏற்போம்.