No results found

    மேற்கு வங்காளத்தில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குதல்


    மேற்குவங்காள மாநிலம் ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு சென்றது. முர்ஷிதாபாத் மாவட்டம் பராக்கா பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் ரெயில் மீது திடீரென்று கற்களை சரமாரியாக வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ரெயில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தால் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. மேற்கு வங்காளத்தில் இதுபோன்று வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைறெ்று வருகிறது. இதுகுறித்து கிழக்கு ரெயில்வே கோட்ட கூறுகையில், ரெயில் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் துரதிருஷ்டவசமானது. வந்தே பாரத் ரெயிலை குறி வைத்து தாக்கும் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது" என்றார்.

    Previous Next

    نموذج الاتصال