சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இங்கேயே கழிவுநீரகற்று வாரிய அலுவலகமும் செயல்பட்டு வந்தது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வந்தது. ரூ.24.92 கோடி செலவில் இவை சீரமைக்கப்பட்டது. இங்கு புதிதாக ரூ.1.13 கோடி செலவில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டு உள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் சென்று திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர். இந்த புதிய கட்டிடத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன என்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
ரூ.24.92 கோடியில் புதுப்பிக்கப்பட்டது: சிந்தாதிரிப்பேட்டையில் குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Tamil News