No results found

    ராம நவமியையொட்டி திருப்பதியில் சிறப்பு திருமஞ்சனம்: மாட வீதியில் சாமி வீதி உலா


    திருமலையில் ஆண்டு தோறும் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு 2 நாட்களுக்கு திருவிழா நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஸ்ரீராம நவமி கொண்டாடப்பட்டது. இதை யொட்டி இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமலையில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர்களான சீதாதேவி, ஸ்ரீராமர், லட்சுமணர் மற்றும் அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை திருமலையில் அனுமன் வாகனத்தில், ஸ்ரீராமர் அலங்காரத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனைத் தொடர்ந்து இரவு ராம நவமி ஆஸ்தானம் கடைபிடிக்கப்படும். நாளை இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம் கோவில் தங்க வாசல் அருகே நடைபெற உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال