No results found

    பாராளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல்


    டெல்லியில் பாராளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சி எம்.பிக்கள் பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். எதிர்க்கட்சிகளின் பேரணி அறிவிப்பை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் வெளியே உள்ள சாலையிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பேரணியாக எதிர்க்கட்சிகள் செல்ல இருந்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال