No results found

    போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி


    போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 86). ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரிக்கு திடீரென்று சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டதாக இத்தாலி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இந்தநிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், நுரையீரல் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெ்றறு வருவதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாடிகனின் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புருனி கூறும்போது, போப் பிரான்சிஸ் சில நாட்களாக சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டார். அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவர் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார். அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்றார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் முதுமை காரணமாக உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ளார். மூட்டு வலியால் சக்கர சைக்கிளில் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம், அவரது பெருங்குடலின் 13 அங்குலம் அகற்றப்பட்டது. போப் பிரான்சிஸ் இளைஞராக இருந்த போது சுவாச நோய் தொற்று காரணமாக ஒரு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

    Previous Next

    نموذج الاتصال