No results found

    9 ஆண்டு ஆட்சி சாதனையை மக்களிடம் விளக்கி கூறுங்கள்- பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்


    பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி அனைத்து எம்.பி.க்களும் அவர்களது தொகுதிகளில் மே மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை பிரசாரம் செய்து அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறுங்கள். இவ்வாறு மோடி பேசியதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜனதாவின் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு கட்சியின் தலைர் ஜே.பி.நட்டா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال