No results found

    பிளஸ் 2 பொதுத்தேர்வு: முதல் நாளில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்


    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மொழி பாடத்தேர்வு நடைபெற்றது. அதில் மொத்தம் விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்களில் 50, 674 பேர் முதல் நாளில் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, வழக்கமாக 4 முதல் 5 விழுக்காடு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வின் போது ஆப்சென்ட் ஆவது வழக்கமான ஒன்றுதான் இதில் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் 8 லட்சம் மாணவர்களில் 50 பேர் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி வரக்கூடிய தேர்வுகளில் இதே அளவு ஆப்சென்ட் இருக்குமா? என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அதிகாரிகளுடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது.

    Previous Next

    نموذج الاتصال