இன்று தொடங்கிய பிளஸ்-1 தேர்வு ஏப்ரல் 5-ந் தேதி முடிகிறது. ஒவ்வொரு தேர்விற்கும் கால இடைவெளி கொடுக்கப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் (16-ந் தேதி) ஆங்கில தேர்வு, 20-ந் தேதி இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, பாடப்பிரிவு மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது. தொடர்ந்து 24, 28, 30 ஆகிய தேதிகளில் தேர்வு நடக்கிறது. ஏப்ரல் 5-ந் தேதியுடன் பிளஸ்-1 தேர்வு முடிகிறது. அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ந் தேதி பொதுத்தேர்வு தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. 10, 12-ம் வகுப்பு பொதுத்தோவு போலவே பிளஸ்-1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் அவர்களை வெளியேற்ற தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் தேர்வு கூடங்களில் கட்டாயமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு, உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வை உற்சாகத்துடன் இன்று எழுதினார்கள். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்திற்கு செல்வதற்கு முன்பு மாணவர்கள் ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்றனர். சென்னை மாவட்டத்தில் 50 ஆயிரம் பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள். கண்காணிப்பு குழுவினர் முறைகேடு நடைபெறாமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கு நேற்று தேர்வு தொடங்கியது. இதை 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இதை தொடர்ந்து இன்று பிளஸ்-1 தேர்வு தொடங்கியது. இத்தேர்வினை 7 லட்சத்து 88 ஆயிரம் பேர் எழுதி வருகிறார்கள். 50 ஆயிரம் மாணவர்கள் முதல் நாள் தேர்வில் பங்கேற்கவில்லை. நாளை (15-ந் தேதி ஆங்கில தேர்வு நடக்கிறது. இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 7 ஆயிரத்து 600 பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகள் 3,169 தேர்வு மையங்களில் இந்த தேர்வை எழுதுகின்றனர்.