No results found

    இலவச தொழில் திறன் வளர்ப்பு பயிற்சி


    பெரம்பலூரில் உள்ள ஐஒபி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவசமாக தொழில் திறன் வளர்ப்பு பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அம்மைய இயக்குநர் ஆனந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூரில் உள்ள ஐஒபி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் 2023-2024ம் ஆண்டில் இலவசமாக தொழில் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கவும் சுயவேலை வாய்ப்பை அதிகரிக்கவும் மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் எனும் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில்,முன்னோடி வங்கியான இந்தியன் ஒவர்சீஸ் வங்கி தனது சிநேகா அறக்கட்டளையின் மூலம் ஐஒபி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தொழிற் பயிற்சிகள் இலவசமாகவும், குறுகிய கால தீவிரமான பயிற்சி வகுப்புகளாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.பயிற்சி மையத்தின் 2023 -2024ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்டுள்ள பயிற்சிகள் - கறவை மாடு பராமரிப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், பசுமை குடில் மற்றும் நிழல் வலை அமைப்பு, பெண்களுக்கான தையற்கலை, ஆடு வளர்ப்பு, சணல் பொருட்கள் தயாரிப்பு, எம்பிராய்டரி & ஃபேப்ரிக் ஓவியம், காளான் சாகுபடி, அழகு கலை பயிற்சி, ஃபாஸ்ட் ஃபுட் (துரித உணவு) தயாரிப்பு, மலர் சாகுபடி பயிற்சி, ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் பழுது நீக்கல் பயிற்சி, சிசிடிவி கேமராவின் நிறுவல் மற்றும் சேவை, பாதுகாப்பு அலாரம் மற்றும் ஸ்மோக் டிடெக்டர், கறவை மாடு பராமரிப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், கொத்து & கான்கிரீட் வேலை, காய்கறி நாற்றங்கால் மேலாண்மை மற்றும் சாகுபடி, பட்டு வளர்ப்பு, கணினி கணக்கியல், பட்டு வளர்ப்பு, பெண்களுக்கான தையற்கலை, ஆடை அணிகலன் தயாரிப்பு, சணல் பொருட்கள் தயாரிப்பு, எம்பிராய்டரி & ஃபேப்ரிக் ஓவியம், டிரைவிங் பயிற்சி ஆகிய 24 பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.பயிற்சி வகுப்புகள் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை முழுநேர வகுப்புகளாக நடத்தப்படுகிறது. பயிற்சியின் போது காலை மற்றும் மதிய உணவு தேனீருடன் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இலவசமாக தரப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பொருளாதார உதவி பெற சிறப்பான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.பயிற்சிகளில் சேர்வதற்கு, வயது 19 க்கு மேல் மற்றும் 45 க்கு குறைவாகவும் , எழுத படிக்க தெரிந்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் அல்லது ஏஏஓய் குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் சங்குபேட்டை ஐஓபி வங்கி மேல் மாடியில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரிலோ அல்லது 04328- 77896, 9488840328 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال