No results found

    1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை- அன்பில் மகேஷ் பொய்யாமொழி


    சென்னை ராணிமேரி கல்லூரியில் இன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வைரஸ் தொற்று காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள தேர்வுகளை மாற்றி வைப்பதற்கான முடிவுகள் தற்போது வரை எடுக்கப்படவில்லை. எனவே முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை. வைரஸ் தொற்று அதிகரித்தால் சுகாதாரத்துறையுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். 12-ம் வகுப்பு தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாமல் இருந்துள்ளனர். அதற்கு குடும்ப சூழ்நிலை அல்லது தேர்வு பயம் காரணமா அல்லது 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு என 2 பொதுத் தேர்வுகள் எழுதுவதால் ஏற்படும் அழுத்தம் காரணமா என்பது குறித்து ஆராயப்படும். அதிகமாக தேர்வு எழுத தவறிய மாணவர்கள் அடங்கிய கிருஷ்ணகிரி, கரூர், தர்மபுரி உள்ளி்ட்ட மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம். இப்போது வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வைப்பது குறித்த முடிவு எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال