No results found

    ஹர்மன்பிரீத் கவுர், நட் சீவர் அபாரம் - தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி


    மகளிர் பிரீமியர் லீக் டி 20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 10-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் அலிசா ஹீலி 58 ரன்னும், தஹ்லியா மெக்ராத் 50 ரன்னும் எடுத்தனர். உ.பி. அணி சார்பில் சாயிகா இஷாக் 3 விக்கெட்டும், அமீல கெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணி தொடக்கம் முதல் அதிரடியில் இறங்கியது. யஸ்தீகா பாட்டியா 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், நட் சீவர் பிரன்ட் ஜோடி இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. கவுர் 53 ரன்னும், நட் சீவர் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இறுதியில் மும்பை அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் 4வது வெற்றியையும் பதிவு செய்தது.

    Previous Next

    نموذج الاتصال