No results found

    ஆஸ்கர் விருது மூலம் இந்தியா பெருமை கொள்கிறது - 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்திற்கு மோடி வாழ்த்து


    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்றது. சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் புகழ் பெற்றது. இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைக்கூறப்படும் ஒரு பாடல். இந்த மதிப்பு மிக்க அங்கீகாரத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ்க்கு வாழ்த்துகள். இந்த ஆஸ்கர் விருது மூலம் இந்தியா பெருமை கொள்கிறது.

    Previous Next

    نموذج الاتصال