முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று கோவளம் கடற்கரையில் மாபெரும் படகுப்போட்டி நடைபெற்றது. காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ள இந்த படகுப்போட்டியில் 20 மீனவ கிராமங்களை சேர்ந்த 160 போட்டியாளர்கள் பங்கேற்றனர். படகுப்போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். கரைக்கு திரும்பும் போட்டியாளர்கள் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படகுப்போட்டியில் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கோவளத்தில் மாபெரும் படகுப்போட்டி- அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்
Tamil News