No results found

    நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை- அமைச்சர் கே.என்.நேரு


    தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாத பதிலுரையில் நேற்று தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:- நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்தும் முதலமைச்சரின் அனுமதி பெற்று, முயற்சிகள மேற்கொள்ளப்படும். இதேபோல், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், அவிநாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான கோரிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன. 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை எங்கு இணைக்கலாம் என முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    Previous Next

    نموذج الاتصال