No results found

    அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் - ஜனாதிபதியிடம் மம்தா கோரிக்கை


    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார். இதற்காக கொல்கத்தா சென்ற அவரை முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, திரவுபதி முர்முவை 'தங்க மங்கை' என வர்ணித்தார். மேலும் அவர் பேசியதாவது: பல்வேறு சமூகங்கள், சாதிகள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்கள் காலங்காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் பெருமைமிக்க பாரம்பரியத்தை நாடு கொண்டுள்ளது. இந்த நாட்டின் அரசியலமைப்பின் தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள். இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தையும், நாட்டு ஏழை மக்களின் அரசியல் சாசன உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒரு பேரழிவில் இருந்து இதை பாதுகாக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال